
பத்து மாதம் கருவறையில்
பத்திரமாய் நான் இருக்க – என்
முகம் பார்ப்பதற்காய் பாவி – நீ
துடி துடிச்சாய்…………………..!
~~
பூமிக்கு வந்த பின்னும்
அன்பாலே அரவனைத்து
ஆசையாய் பல கதைகள்
நீயும் தான் பேசிடுவாய்………………!
~~
பள்ளிக்கு செல்கையிலும் – கை
பிடித்து செல்கிறாய் – புரியாத
பாடத்தையும் புரியும்படி எனக்கு
எடுத்து சொன்னவள் நீ…………………..!
~~
பாரீட்சை எண்று – கண்
விளித்து நான் படித்தால்
பக்கத்தில் உதவியாக நீ இருப்பாய்……………!
~~
சின்னஞ் சிறு குழந்தை முதல்
பெரியவளாய் ஆகும் வரை என்னோடு
துணையாக நீ இருந்தாய்………………..!
~~
தந்தை இல்லா ஊரில் – தாயோடு
நான் இருந்தேன் – அண்று
துணையாக நீ வந்தாய்
கண் உறங்கும் வேளையிலும்
பக்கத்தில் நீ………………….!
~~
நாடு விட்டு நாடு வந்தும்
உன் நினைவு அளியவில்லை
உறங்குகின்ற போதிலும் – கண்களில்
கண்ணீர் – காரணம் உன் பிரிவால்………………!
~~
உன்னைப்போல் நானும் படித்து
விட ஆசை கொன்டேன் -இன்று
என்னை விட்டு சென்று விட்டாய்
என் ஆசை கூட உன்னை தேடுதடி…………………!
~~
கஸ்ரம் என்று உன் அன்னை
உன்னை படிக்க வைக்க மறந்ததில்லை
இன்று உன் அன்னையின் கனவு கூட
மண்ணாகி விட்டதடி……………………………!
~~
அன்பாலே உன்னை அரவனைத்த
உன் அன்னை இன்று கண்ணீரால்
உன்னை யாசிக்கின்றாள்…………….!
~~
உன் படிப்பிற்காய் எத்தனையோ
கஸ்ரம் ஒண்றாக தாங்கியவள்
உன் அன்னை – இன்று அத்தனையும்
நினைத்து தான் உன் அன்னை ஏங்குகிறாள்………….!
~~
எத்தனை கஸ்ரம் அத்தனையும்
சுமந்தாலும் – இன்று மகள்
கூட சென்றுவிட்டால் – உன்
அன்னை மனம் தாங்கல்லம்மா……………………..!
~~
உனக்காக உன் தந்தை
எப்படியோ மாறிவிட்டார் – இன்று
நீ இல்லா இவ் உலகில்
வாழ்ந்திடத்தான் பிடித்திடுமா……………………?
~~
உன் மனம் வாடினாலே
உன் தங்கை அழுகிறாள்
இன்று நீ இல்லா இவ் உலகில்
எப்படித்தான் வாழ்ந்திடுவாள்………………………?
~~
வயதிலே சின்னவள் தான் உன்
தங்கை – இன்று மனதாலே
சோகங்கள் அவள் மனதை தாக்கிதடி………………..!
~~
அக்கா என்று சொல்லி விட
உன்னை விட யாருமில்லை – ஒரு
அக்காவாய் இன்று அவள் கண்ணீர்
துடைக்க பக்கத்தில் நான் இல்லை……………………!
~~
உன்னைப் பார்த்து எத்தனையோ
ஆண்டுகள் இருந்தும் – இறுதியில்
கூட உன் முகம் காண – என்
கண்களுக்கு வரம் இல்லை………………………….!
~~
போராளியாய் நீ மண்ணில்
போரிட்ட போதிலும் – அன்பான
உன் உள்ளத்தில் எங்கள் நினைவுகள்
அளிந்திருக்க முடியாது…………………………………….!
~~
போராளியாய் நீ வீரமரணம்
கொண்டது மகிழ்ச்சிதான் – ஆனால்
இவ் உலகை விட்டு சென்று விட்டாய்
என்று நினைக்கையிலே
உள்ளம் கூட நடுங்கிதடி……………………………………!
~~
உன்னை நான் இளப்பேன் என்று
கனவில் கூட நினைக்கவில்லை – இன்று
என் கையால் உன் படத்திற்கு
மாலை இட வைத்து விட்டாய்……………………………..!
~~
எத்தனையோ சொந்தங்கள் – இன்று
உன் நினைவால் ஏங்குதடி – நீ
ஒருமுறையாவது கண்
திறந்து பார்த்துவிடு………………………………………!
~~
சொந்தங்கள் அத்தனையும் – ஒன்றாக
அழுகின்றன – பாவி நான் தனிமையிலே
பரிதவித்து நிற்கிறேன்………………………………………!
~~
உன் அன்னை உன்னை கெஞ்சித்தான்
கேட்கிறாள் அவள் அழு குரல்
உன் காதில் கேட்டவில்லையா………………….?
~~
தனியாக எல்லோரையும்
தவிக்க விட்டு செல்கிறாய் – விளியோரம்
கண்ணீரை தந்து விட்டு போகிறாய்………………….!
~~
தோழியே உன்னை தேடுகிறேன்
உன் தோள் சாய்ந்து உறங்குவதற்காய்…………….!
~~
கனவிலாவது என்னோடு – ஒரு
நிமிடம் பேசிவிடு – உன்
திருமுகத்தை ஒரு முறை – என்
கண்ணில் வைத்து விடு…………………………………..!
~~
விளியோரம் வருகின்ற கண்ணீரை
உன் கையால் துடைத்து விடு
உன் நினைவாக நான் இருப்பேன் என்று
சொல்லி விட்டு சென்று விடு…………………………!
~~
தோழியே இன்று கவிதை
ஒன்று உனக்காக – இக்கவியை
யார் தீண்டி பார்த்தாலும் – உன்
நினைவை உணர்த்துமடி………………………………….!
~~
-நிலா